தமிழர்களின் கல்விசார் சிந்தனைக் கருவூலம்

தமிழர்களின் கல்விசார் சிந்தனைக் கருவூலம்

Academic Think Tank of the Tamils

வணக்கம்

தமிழர்கள்  இணைய உலகில் சிதறிக்கிடக்கின்றனர். பல்வேறு

தளங்களில்  இயங்கிய நிலையிலும் ஒறுமித்த கருத்தை உருவாக்க

முடியாது தமிழர்கள்  இருப்பது எதார்த்தம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை  அரசியல், சினிமா தவிர்த்த ஒரு நேர்கோட்டில் ஒருங்கிணைக்க வேண்டிய பெரும் பொறுப்பு கல்விசார்   தமிழ் சக்திகளுக்கு உள்ளது.

 

வல்லமையும், அறிவியல் தமிழ் மன்றமும் செய்தாக வேண்டிய பணிகளுள் இதுவும் ஒன்று.  இப்பணி மிகப்பெரிது, இருப்பினும் நம்பிக்கையுடன் துவங்குவோம் — தமிழ் உலகம் மெல்ல வந்து இணையும், இது காலத்தின் கட்டாயம்.

   திட்ட விளக்கம்:

 1. அறிஞர்கள்தங்களுடைய கருத்தியலை தெளிவு செய்து கொள்ள வேண்டும்.
 2. மூன்றுநிமிட காணொளியாக தங்களுடைய கருத்தியலை பதிவு செய்து எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
 3. காணொளிஉருவாக்க உங்களுக்கு தெரியாத நிலையில் எங்களை  அலைபேசியில் அழைத்து உங்கள் கருத்தியலை தெளிவான இயல்பான நடையில் விளக்கவும்.
 4. நாங்கள்அவற்றை  காணொளியாக மாற்றுவோம்.
 5. உங்கள்கருத்தியல் முகநூல், You Tube  ஆகிய தளங்களில் வெளியாக்குவோம்.
 6. வல்லமைதளத்தில் கருத்தியல் embed  செய்யப்பட்டு பகிரப்படும்
 7. உலகத்தமிழர்கள் வழங்கும் கருத்துரைகளில் சிறப்பானவற்றை நாங்களே You tube comments பகுதிக்கு மாற்றுவோம்.
 8. மூன்றுமாத இடைவெளியில் தமிழர்களின் கல்விசார் சிந்தனைக் கருவூலம்   Academic Think Tank of the Tamils  — என்னும் பெயர்கொண்ட இலவச மின் நூலாக அவற்றை வெளியிடுவோம்.
 9. இன்றையகால நிலையில், அறிஞர்கள் எவ்வாறு சிந்தனை செய்தீர்கள், உலகம் அதனை எவ்வாறு அணுகியது , என்று நாளைய  உலகம் அறிந்துணர இம்முறைமை வழிவகை செய்திடும்.
 10. அறிஞர்களின்கருத்தியல் காப்புரிமை பெரும் (Date of Publication of You tube Video)
 11. இணையஉலகம் உள்ளவரை அறிஞர்களின் கருத்தியலை ஆய்வாளர்கள் அறிந்து உணர்வார்கள்.

 

பேராசிரியர்.டாக்டர்.மு.செம்மல்

MBBS, DLO, (ENT Surgeon) B.Sc,M.Sc,M.Phil (Psychology) M.D (Physiology)

முதன்மை அறிவியல் ஆலோசகர், அறிவியல் தமிழ் அறக்கட்டளை

நிறுவனர், அறிவியல் தமிழ் இணையத் தொலைக்காட்சி

காப்பாளர், மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் மெய்நிகர் ஆவணக்காப்பகம்

8939462185